மதுரையில் 5 வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருநகரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது 5 வயது மகள் வருணிகாவை, அவரது பாட்டி சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட வடமாநில இளைஞர் ஒருவர், சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்றுள்ளார்.
அப்போது, சுதாரித்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.