கோவில்பட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் கடந்த 9-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறுவனின் எதிர் வீட்டில் வசித்து வரும் கருப்பசாமி என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.