இனி அலைச்சல் இல்லை : ATM மூலம் எளிதாக PF பணம் எடுக்கலாம் - சிறப்பு கட்டுரை!
May 20, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி அலைச்சல் இல்லை : ATM மூலம் எளிதாக PF பணம் எடுக்கலாம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி முதல் வருங்கால வைப்பு நிதியான PF கணக்கில் இருந்து, நேரடியாக ATM மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி அமலுக்கு வருகிறது. ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்? யார் எடுக்கலாம் ? எப்படி எடுக்கலாம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), தகுதியுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஓய்வூதியத்திற்கு பிறகு அதன் உறுப்பினர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் சேமிக்கப் படுகிறது. EPF கணக்கில் சேமிக்கப்படும் நிதிக்கு ஆண்டு வட்டியும் சேர்க்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெறும்போது, சேமித்த மொத்த பணத்தையும் ஊழியர்கள் திரும்பப் பெற்று கொள்ள முடியும்.

அவசர மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி மற்றும் வீட்டை புதுப்பித்தல் போன்ற காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓரளவு பணத்தை ஊழியர்கள் இடைக்காலத்தில் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் உள்ளன.தற்போது, பி. எஃப். கணக்கில் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு குறிப்பிட்ட பணம் ஊழியரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிஎஃப் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடிய கார்டுகளை EPFO வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய PF – ATM வசதி பணம் எடுப்பதை மிகவும் எளிதாக்கி உள்ளது.

PF -கணக்கு உள்ளவர்கள், தங்கள் UAN எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனுடன் தங்கள் ஆதாரை எண்ணையும் இணைக்க வேண்டும். மேலும் EPFO-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தங்களின் IFSC குறியீட்டுடன் வங்கி கணக்கு எண்ணையும் நிரந்தர கணக்கு எண் PAN பான் விவரங்களையும் சரியாக உறுதி செய்ய வேண்டும்.

புதிய திட்டத்தின் கீழ் வழங்கப் படும் DEBIT CARD அட்டை மூலம் , நொடியில் PF பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இனி EPFO ​​அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லை. பணத்தைத் திரும்ப பெறுவதற்கான நீண்ட செயல்முறைகள் இனி இல்லை. நாட்டில் உள்ள எந்த ஏடிஎம்மிலும் உடனடியாக பணத்தை எடுக்க முடியும்.

மேலும், 7 நாட்களும் 24 மணிநேரமும் ATMகளில் தங்கள் பணத்தை ஊழியர்கள் எடுக்க முடியும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட எந்த நேரத்திலும் தங்கள் PF பணத்தை இதன் மூலம் எடுக்க முடியும். அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் அவசர சூழ்நிலைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும்.

வருங்கால வைப்பு நிதியில் (PF) குறிப்பிட்ட நோக்கங்களுக்காக EPFO ​​போர்ட்டலில் இருந்து 90 சதவீதம் வரை பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றாலும், திரும்பப் பெறுவதற்கான காரணம் மற்றும் சேவை ஆண்டுகளைப் பொறுத்து ஊழியர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

குறைந்தபட்சம் ஐந்து வருட சேவையை முடித்த பிறகு 90 சதவீதம் வரை PF பணத்தை,வீடு வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆறு மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு சமமான தொகையை அவசர மருத்துவ சிகிச்சைக்காக திரும்பப் பெற்று கொள்ள முடியும். ஏழு வருட சேவையை முடித்த பிறகு 50 சதவீத பணத்தை கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பெற்று கொள்ள முடியும்.

54 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் 90 சதவீத நிலுவைத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ஊழியர்களின் கணக்குடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் படி, இறந்த EPFO ​​உறுப்பினர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுப் பலனை ஏடிஎம் மூலமாகவும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏடிஎம்-மில் PF பணத்தை எடுக்கலாம் என்ற EPFO ​​இன் புதுமையான நடவடிக்கை, இந்தியாவில் சமூகப் பாதுகாப்புச் சேவைகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Employees' Provident Fund.PF accountpf amount through atmatm cashEmployees' Provident Fund Organization
ShareTweetSendShare
Previous Post

AI-யை களமிறக்கிய மத்திய அரசு : 80 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு – சிறப்பு கட்டுரை!

Next Post

2-வது பசுமை புரட்சி : இந்திய வேளாண் துறையில் AI தொழில்நுட்பம் – சிறப்பு கட்டுரை!

Related News

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மருதமலை அருகே பெண் யானை உடல் நலம் பாதிக்க காரணமாக இருந்த குப்டை கிடங்கு – இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

உதகை மலர் கண்காட்சி – சுமார் 86, 000 பேர் கண்டுகளிப்பு!

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies