இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் குவித்துள்ளது.
பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த நிலையில், முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. தொடர்ந்து 2ம் நாள் ஆட்டம் தொடங்கியபோது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் STEVE SMITH மற்றும் TRAVIS HEAD, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தனர். தொடர்ந்து நீண்ட நேரம் போராடி இருவரது விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது.