சேலத்தில் பெயிண்ட் காயாத பேருந்துகள், துவக்க விழாவுக்காக கொண்டு வரப்பட்டதால் பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில், எல்.எஸ்.எஸ். பேருந்துகளை மகளிர் பேருந்துகளாக மாற்றி தெடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பேருந்துகளை கொண்டு வருவதற்காக அவற்றில் அவசர அவசரமாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.
பின்னர் விழாவுக்கு கொண்டு வரப்பட்ட பேருந்துகளில் பயணிகள் ஏறியபோது அவர்களின் கைகளில் பெயிண்ட் ஒட்டியது. மேலும் வாடை அதிகமாக வீசியதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
இதனையடுத்து பேருந்துகளை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தபின் அவை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.