மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 5ஆம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து நாக்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாஜக சார்பில் 20 எம்.எல்.ஏக்களும், சிவசேனா சார்பில் 12 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 9 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.