திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் மழையால் வேரோடு சாய்ந்ததால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பொங்கல் திருநாளுக்காக கரும்பு நடவு செய்திருந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கரும்புகள் வேரோடு சாய்ந்தன.
ஏக்கருக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் செலவு செய்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.