காங்கிரசார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சாடியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட எம்பிக்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறார்கள் என கூறினார்.
ஆனால், அதே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறார்கள் எனவும் விமர்சித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால், அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை காங்கிரசார் ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.