உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து குகேஷ்க்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது குகேஷை காண ஏராளமானோர் விமான நிலையத்தில் குவிந்தனர். விமான நிலையம் வந்தடைந்த குகேஷுக்கு மாலை அணிவித்தும், மலர் செண்டு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செஸ் போர்டு மற்றும் குகேஷின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பிரத்யேக வாகனத்தில் அவர் தனது இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதனிடையே, தமிழக அரசு சார்பில் கலைவாணர் அரங்கில், குகேஷுக்கு நாளை பாராட்டு விழா நடைபெறவுள்ளது.