கமுதி பகுதியில் ஆயிரத்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாம்பரம், காவடிப்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகாய், வாழை, கத்தரி, உளுந்து, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை நேரில் கள ஆய்வு செய்து வெள்ள நிவாரணம், இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.