கேரள மாநிலம் அச்சன் கோவிலில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
முன்னதாக புனலூர் கருவூலத்தில் இருந்து தங்க அங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் கொண்டுவரப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் மண்டல மஹோற்சவ விழாவில், வரும் 24-ந் தேதி தேரோட்டம், கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், 25-ந் தேதி ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.