கடலூர் மாவட்டம், பாலூர் அருகே வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி 13 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் அதில் பாலூர், சுந்தரவாண்டி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணமான 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பண்ருட்டி – கடலூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.