உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக குகேஷ் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போட்டியில் வெற்றி பெற தனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், உலக செஸ் சாம்பியனாவது தனக்கு சிறுவயதிலிருந்தே மிகப்பெரிய கனவு என்றும், இளம் வயதில் உலக சாம்பியனானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.