திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கொள்ளிட கரையோரத்தில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் மாடுகளை கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் உபரிநீர் திறக்கப்பட்டதால், திட்டுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் தண்ணீரில் தத்தளித்தன. உரிமையாளர்களை கண்டதும் மாடுகள் நீந்து கரை ஏறி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.