நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமமான ஆத்தங்குடியில் வசிக்கும் மக்கள் குடிசைத் தொழிலாக டைல்ஸ் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து, நடிகரும் போட்டியாளருமான தீபக் தவறான கருத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய தனியார் தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காரைக்குடி உதவி காவல் காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.