நிலையான மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அடையாளம் காணும்போது தன்னலமற்ற சேவையை செய்ய தொடங்குவீர்கள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
புனேயில் நடைபெற்ற பாரத் விகாஸ் பரிஷத் விக்லாங் கேந்திராவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். விழா மேடையில் பேசிய அவர், சமூகத்தில் அனைத்தும் தவறாக நடக்கிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு தவறு நடந்தால் அதே வேளையில் 40 நல்ல விஷயங்களும் சமூகத்தில் நடந்துகொண்டு இருப்பதாக அவர் கூறினார். ஒருவர் தன்னுள் எழும் ஈகோவை பெரிதென எண்ணாமல் இருக்க வேண்டுமென தெரிவித்த மோகன் பகவத், அவ்வாறு எண்ணினால் குழிக்குள் விழ நேரிடும் எனவும் எச்சரித்தார்.