ராமநாதபுரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை, பயணிகள் தள்ளிவிட்டு இயங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து வீரசோழன் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நல்லூர் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு வழிவிடும் போது சாலையோரப் பள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டது.
ஏற்கனவே செல்ஃப் எடுக்காத நிலையில், சாலையோரம் சிக்கியதால் என்ஜின் off ஆனது. இதையடுத்து பயணிகள் அனைவரும் வடிவேலு காமெடி பாணியில் பேருந்தை தள்ளிவிட்டு இயங்க வைத்து பயணம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.