ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனையான பச்சை மிளகாய் ஒரே நாளில் விலை சரிந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் கனமழை காரணமாக கடந்த வாரத்தில் பச்சை மிளகாய் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ மிளகாய் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது.
தற்போது மழை குறைந்துள்ளதால் மிளகாயின் வரத்து அதிகரித்து ஒரு கிலோ 20 ரூபாய் என்ற அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. இந்த விலை நிலவரம் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.