திருவள்ளூர் அருகே ஆடுகளை கடத்தி செல்ல முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களை போலீஸ் அதிகாரிகள் விடுவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் வளர்ந்து வந்த ஆடுகளை காரில் வந்த 4 இளைஞர்கள் கடத்தி செல்ல முயன்றனர்.
அப்போது காரை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள், இளைஞர்களை பிடித்து சரமாரி தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர், ஆடு உரிமையாளரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து அவர்களை விடுவித்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.