ஐ.சி.யூ.வில் தமிழக சுகாதாரத்துறை! : சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியான உண்மை!
Jul 26, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐ.சி.யூ.வில் தமிழக சுகாதாரத்துறை! : சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியான உண்மை!

அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக சி.ஏ.ஜி எனப்படும் கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்வேறு இயக்குனரகங்களில் மொத்தமாக 29 ஆயிரத்து 27 காலிப்பணியிடங்கள் அதாவது 28 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிலவிவருவது தெரியவந்துள்ளது.

குடும்ப நல இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் குடும்ப நல உதவியாளர், குடும்ப நல விரிவாக்க கல்வியாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் பணியிடங்கள் 100 சதவிகிதம் காலிப்பணியிடங்களாகவே இருந்துள்ளன.

அதே போல ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 791 காலிப்பணியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் 10 ஆயிரத்து 759 துணை மருத்துவர் பணியிடங்களில் 3 ஆயிரத்து 621 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ICU பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைகளுக்கும் தலா ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்ற இந்திய செவிலியர் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் 60 முதல் 88 சதவிகிதம் வரை செவிலியர் பற்றாக்குறை இருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை உறுதி செய்துள்ளது.

அதிலும் செய்யாறு, ஈரோடு, கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான செவிலியர்களே ICU பிரிவில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அரசு, அதன் பின் முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும், மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த தனி வாரியம் அமைக்கப்பட்டிருந்தாலும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பின் தங்கியே இருந்ததாகவும் சிஏஜி அறிக்கையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் சேவையில் போதிய ஜிபிஎஸ் வசதி இல்லாத காரணத்தினால் இலக்கான 20 நிமிடங்களை 46 சதவிகித அழைப்புகள் சென்றடையவில்லை என்ற தகவலையும் சி.ஏ.ஜி அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசால் பல்வேறு வகைகளில் திரட்டப்பட்ட நிதியான ஆயிரத்து 787 கோடி ரூபாயில் 264 கோடி ரூபாய் மீதமிருப்பதும் தெரியவந்துள்ளது.

கொரானா தொற்று காலத்தில் ராஃபா எனும் நிறுவனம் பத்துலட்சம் N-95 முகக்கவசங்களை வழங்க முன்வந்திருந்த போதிலும், அந்த நிறுவனத்திடமிருந்து ஐந்து லட்சம் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், அதன் விளைவாக மற்ற நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து N-95 முகக்கவசங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

Tags: tamilnaduTamil Nadu Health DepartmentTamilnadu health department in ICU! : The truth revealed in the CAG report!
ShareTweetSendShare
Previous Post

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இலங்கை பாகிஸ்தானில் அதிகம்! : நிர்மலா சீதாராமன்

Next Post

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது! : தர்மேந்திர பிரதான்

Related News

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies