திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை 30 நாட்களுக்குப் பின்னர் உற்சாகமாக பிரகாரத்தில் வலம் வந்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 28-ம் தேதி கோயில் யானை தெய்வானை தாக்கியதில், யானைப் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தனர்.
இதனால், மண்டபத்தில் கால்நடை மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யானைக்கு கஜபூஜை நடத்திய பின்னர், நடை பயிற்சிக்காக வெளியே அழைத்துவரப்பட்டது. 30 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த யானை தெய்வானை உற்சாகத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தது.