புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தா ஆகியோர் சிறப்பு காட்சியை பார்க்க சென்றனர். அப்போது கூட்டம் அலைமோதியதில் ரேவதி என்பவரும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். இருவர் மீதும் அங்கிருந்தவர்கள் ஏறி மிதித்ததில், ரேவதி உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.