ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என யாராக இருந்தாலும், அவர்களை நோக்கி தொழில் துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற Times Business Awards-2024 நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய, அவர், தமிழகத்தில், தனி சிறப்பு பெற்ற மாநகரமாக கோவை விளங்குவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்ட பணிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என யாராக இருந்தாலும், அவர்களை நோக்கி தொழில் துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.