புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆராய்ச்சியின் முடிவில் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி புற்றுநோயைக் குணப்படுத்துவதில் திறம்பட செயலாற்றுவதாக ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக விநியோகிக்க போவதாக ரஷ்ய சுகாதாரத் துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆன்ட்ரூ கப்ரின் தெரிவித்தார்.