திருமண நிகழ்வில் பங்கேற்க கோவா சென்ற தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட புகைப்படத்தை எடுத்து வெளியிட்டவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தவெக தலைவர் விஜய் திருமண நிகழ்வில் பங்கேற்க கோவா சென்றதாகவும், அவரின் விஜய்யின் தனிப்பட்ட புகைப்படம் எப்படி வெளியே வந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.