பாஜக எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்த ராகுல் காந்திக்கு அதிகாரம் கொடுத்தது யார் எனக் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதத்தின் மூலம் ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரியவருவதாக கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய கிரண் ரிஜிஜு, பாஜகவினர் ஜனநாயகத்தை நம்புவதால், இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என குறிப்பிட்டார்.