மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, அமைச்சர் ஜார்ஜ் குரியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் குழந்தை ஏசுவின் குடிலில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த பிரதமர், நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கிருஸ்தவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.