நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 12 -ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ,
118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை, நூறு புள்ளி 18 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.