திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் ஓட்டுநருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் திருவள்ளூரில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
சப்தகிரி விரைவு ரயில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் அருகே சென்றபோது ஓட்டுநர் யுகேந்திரனுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட அவர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக ரயிலை நிறுத்தினார். பின்னர் மருத்துவமனைக்கு யுகேந்திரன் அழைத்து செல்லப்பட்ட நிலையில், பயணிகள் மாற்று ரயிலில் ஏறி சென்னை சென்றனர்.