சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்தனர். கையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் நவீன், மைதீன், தனசேகரன், மகேந்திர குமார், தீபக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நித்திவேல், லோகேஷ், மணிகண்டன் ஆகிய 3 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.