மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ பணிகள் துவங்கி 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைப்பதற்கான திட்டத்தின் முழு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்த அவர், மதுரையில் மொத்தமாக 17 ரயில் நிறுத்தங்கள் அமைய உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அருகே கூடுதலாக ஒரு மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைக்கப்படும் என்றும் அர்ஜுனன் கூறினார்.