இந்திய மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் வலிமையான அரசாக, மோடி தலைமையிலான மத்திய அரசு விளங்கி வருவதாக, மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.
பொருளாதாரம் என்பது தனி மனிதனுக்கு உணவு போன்றது என்றும், மத்திய அரசின் திட்டங்களால் கொரனாவிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டதாகவும் அவர் தெரிவித்தார். தேசபக்தி கொண்ட ஊடகமாக தமிழ் ஜனம் செயல்பட்டு வருவதாகவும் சண்முகநாதன் குறிப்பிட்டார்.