நெல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஏஜென்ட் மனோகர் மற்றும் குப்பைகளை கொட்ட உதவிய மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைதான நிலையில், கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ‘கழிவுகள் அகற்றும் நிறுவனத்தின்’ மேற்பார்வையாளர் நிதின் ஜார்ஜ் மற்றும் லாரி உரிமையாளர் செல்லதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.