தியாகராஜர் சுவாமிகளின் 178-ஆவது ஆராதனை விழாவையொட்டி பந்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி கரையில் வாழ்ந்து மறைந்தார்.
அவர் மறைந்த பகுள பஞ்சமி தினம் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் இசை கலைஞர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 178ஆவது ஆராதனை விழா அடுத்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி பந்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.