நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவு அலுவலர்களும் நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.