பொதுவெளியில் முதலமைச்சரை ஆபாசமாக பேசியதை செல்போனில் படம்பிடித்த திமுக பிரமுகரை ஓடஓட விரட்டி சென்று விசிக மாநில பொறுப்பாளர் தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை நெடுங்குளம் சந்திப்பில் நின்று கொண்டு தமிழக முதலமைச்சர் குறித்து விசிக மாநில செயலாளர் ஸ்டீபன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு தமது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஸ்டீபன், திமுக பிரமுகர் பிரபுவை ஓடஓட விரட்டி சென்று தாக்கியதுடன் அவரது செல்போனை பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விசிக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த பிரபு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை தாக்கிய ஸ்டீபன் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமது இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை ஸ்டீபன் எடுத்து சென்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.