சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி அடுத்த திருமனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குரூப்களில் தகாத வார்த்தைகளில் மாணவர்கள் பேசிக் கொள்வது போலவும், தாக்கிக் கொள்வதும் போன்றும் வீடியோ வெளியானது. இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.