ஆந்திர மாநிலம் அண்ணமையா பகுதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பழைய நாணய வியாபாரிகள் இருவர் படுகாயமடைந்தனர்.
ராயசோட்டி அருகே உள்ள மாதவரம் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பழைய நாணய வியாபாரிகள் இருவரை நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும், போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தொழில்போட்டி காரணமாக இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.
















