சேலம் ராமலிங்க வள்ளலார் பள்ளி நிலத்தை விற்பனை செய்ய வேண்டாம் என, அதன் உரிமையாளர் காலில் விழுந்து பாமக எம்எல்ஏ அருள் கோரிக்கை விடுத்தார்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவி பெறும் ராமலிங்க வள்ளலார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி நிலத்தை உரிமையாளர் விற்பனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மூடப்பட்டால், தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என நினைத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பாமக எம்எல்ஏ அருள் உரிமையாளரின் காலில் விழுந்து நிலத்தை விற்பனை செய்ய வேண்டாமென கெஞ்சி கோரிக்கை விடுத்தார்.