ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீராவி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக, விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் காப்பாளராக பாக்கியலட்சுமி என்பவரும், சமையலராக ராசம்மாள் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அரிசியை மூட்டையாக கட்டி பள்ளி மாணவிகள் மூலம் தூக்க வைத்து, சமையலர் கடத்தி சென்றுள்ளார். இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.