ஹரியானா மாநிலம் சிர்சாவில் மறைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் புகைப்படத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,
“5 முறை ஹரியானா முதலமைச்சராக இருந்துள்ள ஓம் பிரகாஷ் சவுதாலா மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவை செய்துள்ளார் என்றார்.
மேலும், அவர் செய்த பணியால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் எனவும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இழப்பு தனிப்பட்ட முறையில் தம்மை பாதிக்கும் எனவும் ராஜ்நாத் சிங் கூறினார்.