கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசினர் கலைக்கல்லூரியில் BA மற்றும் MA வகுப்புகள் உள்ள பிரிவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் அறையை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராவிட்டால் வகுப்புகளை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.