விடாமுயற்சி படத்திற்கான ப்ரீ புக்கிங் அமோகமாக நடந்து வருகிறது. அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது என இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் UK மற்றும் அயர்லாந்தில் துவங்கியுள்ளது. இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.