8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்தவகையில், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையின் பேரில் துபாயில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் இவ்விரு ஆட்டங்களும் துபாயில் தான் நடைபெறும். மாறாக இந்தியா இறுதிப்போட்டிக்கு வராவிட்டால், இறுதி ஆட்டம் பாகிஸ்தானில் நடைபெறும். ஓரிரு நாட்களில் இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட உள்ளது.