கேரளாவில் மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபர் மீதே ரயில் கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னென் பாறையில் மதுபோதையில் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மதுபோதை நபரின் மீதே கடந்து சென்றது.
இதில் அவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், ரயில் கடந்து சென்ற பின் மதுபோதை நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்து சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.