சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சாலை மேடு பள்ளத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சுரங்கப்பாதையில் சாலை மேடு, பள்ளத்துடன் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் அவ்வழியை கடந்து செல்ல அதிக நேரம் எடுப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.