கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கொட்டி செல்லும் வாகனங்களை சிறைபிடித்து ஓட்டுநர்களை கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, கடந்த 2 நாட்களாக களியக்காவிளை வழியாக வரும் வாகனங்களை போலீசார் சிறைபிடித்து வந்த நிலையில், கொல்லங்கோடு வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்த 2 இறைச்சி கழிவு வாகனங்களை புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த தீபு, நந்து, அஜி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.