மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், வன்னியர்களை திமுக தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டும் அல்லது துணை முதலமைச்சராவது ஆகி இருக்க வேண்டுமெனவும் கூறினார்.
ஆனால் திமுகவின் தியாகி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளதாக விமர்சித்துள்ளார்.