தமிழகத்தில் நீதிமன்றங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை காமராஜர் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் ஹிட்லர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அதிமுக ஆட்சி விரைவில் அமையும் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீதிமன்றங்களில் கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், அரசை நம்பாமல் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.