வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதாலியின் வாடிகன் நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில், ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது போப் பிரான்சிஸ் இயேசு பிறப்பு குறித்த அறிவிப்பை வாசித்து குழந்தை ஏசுவுக்கு முத்தமிட்டார். இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை துதிக்கும் பல பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.